ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய தேசம் ஆகும். இந்த நாடு ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடக்கிறது. அது நள்ளிரவு நேரத்திலும் சூரிய ஒளி இந்த நாட்டின் நிலப்பகுதியில் விழுவதுதான்.
ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் வரை சூரிய ஒளி பிரகாசமாக இங்கு வீசுகிறது. குறிப்பாக, அங்குள்ள நார்த் ஆர்டிக் பகுதிகளில் இந்த அதிசய நிகழ்வைக் காணமுடியும்.