ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருக்கும்போது வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலங்கானாவில் இருக்கும் கச்சிபவ்லியில் தனது பணியை முடித்துக் கொண்டு ஷம்ஷாபாத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் 27 வயது கால்நடை பெண் மருத்துவர் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரது வாகனம் திடீரென பழுதடைந்துவிட்டது. தனது சகோதரிக்கு செல்போனில் தகவலை சொல்லிக் கொண்டு இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போனிலும் சார்ஜ் முடிந்துவிட்டது. அப்போது அங்கு வந்த இருவர் அவரது வாகனத்தை பழுதுபார்த்து தருவதாகக் கூறியுள்ளனர்.
பின்னர் மருத்துவரை வன்புணர்வு செய்து எரித்துக் கொன்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறை நடத்திய விசாரணையில் ஆந்திராவில் ஆனந்தபூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.