நாட்டில் நிலவி வரும் வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்க, மத்திய அரசு இதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளது.
நாடு முழுவதும் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து, நிலைமையை சமாளிக்க இந்த அத்தியாவசியப் பொருளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
நம் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருள்களில் வெங்காயத்துக்கு தனியிடம் உண்டு.
அதிகம் விளையும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக, வெங்காய சாகுபடி இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, டெல்லி முதல் சென்னை வரை அனைத்து முக்கிய நகரங்களிலும் இதன் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும். நாள்தோறும் வெங்காயத்துக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இந்த நிலையில், நாட்டின் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்க, இதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.