கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. கணவன்-மனைவி பரிதாப பலி.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது மோதி கார் விபத்து. 

சென்னை நுங்கம்பாக்கத்தை சார்ந்த ஏழுமலை 61 இவர் தனது மனைவி சசிகலா 49 உறவினர் தினேஷ் ஆகியோருடன் தீபாவளிக்காக கள்ளக்குறிச்சியில் வசித்துவரும் உறவினர்களை பார்க்க நேற்று காலை காரில் சென்றனர்.

அச்சிறுபாக்கத்தை அடுத்த தொழுப்பேடு வந்தபோது எதிர்பாராத விதமாக கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புகளை இடித்துக் கொண்டு மறு திசையில் சென்றது அப்போது மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது மோதி நிலைதடுமாறி நின்றது. 

விபத்தில் காரில் பயணம் செய்த ஏழுமலையும் சசிகலாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன்வந்த தினேஷ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் 

டி.எஸ்.சரவணன் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.