பழனியில் கனமழை காரணமாக பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை
பழனி



 

பழனியில் பெய்த கனமழை காரணமாக முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்தசில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பழனி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.இதனால் பழனியருகே உள்ள அமரபூண்டி, வேப்பன்வலசு, கொத்தயம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னூறு ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளைசோள பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் எனவே சோதமடைந்த பயிர்களுக்கு அரசு மதிப்பிடு செய்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.